ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை பொதுமேடையில் வெளுத்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்..!

3 Min Read

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல பேசுகிற எல்லோருமே கண்ணியத்தோடு பேச வேண்டும் என்று பொதுச்செயலாளராக உத்தரவிடுகிறேன்’’ என கட்சி பொதுமேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடிந்துகொண்டார் அமைச்சர் துரைமுருகன்.

- Advertisement -
Ad imageAd image

தி.மு.க-வின் மேடை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் எதிர்க்கட்சியினரைத் தகாத வார்த்தைகளால் பேசியே சோஷியல் மீடியாக்களில் பிரபலமானவர்.

ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை பொதுமேடையில் வெளுத்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்

அருவருக்கத்தக்க வகையில் உருவ கேலி செய்வது, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ரைமிங்காக பேசுவது என எல்லை மீறி பேசிக்கொண்டே இருந்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

அப்போது சமீபத்தில், தமிழக ஆளுநர் மற்றும் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு போன்றோரையும் தகாத வார்த்தைகளால் பேசி சர்ச்சையில் சிக்கினார். இதை அடுத்து, தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

அமைச்சர் துரைமுருகன்

கடந்த சில தினங்களிலேயே, அவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெற்றுக்கொண்டது தி.மு.க தலைமை. அதன் பிறகும், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சில் கண்ணியம் காட்டவில்லை.

இந்த நிலையில், தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் முன்னிலையிலும் இதே தொனியில் பேசி மாட்டிக்கொண்டார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குப் பிரசாரம் செய்வதற்காக நேற்றைய தினம் குடியாத்தம் வந்தார் அந்த கட்சியின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். உதயநிதி வருகைக்காக காத்திருந்தார் அமைச்சர் துரைமுருகன்.

அப்போது, கூடியிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் குறித்து மிக மோசமாக பேசினார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

அமைச்சர் துரைமுருகன்

அதைக்கேட்டு கடுப்பான துரைமுருகன் மைக்கை வாங்கி, ‘உன் பேரு என்ன?’ என்று கேட்டார். ‘சிவாஜி கிருஷ்ணமூர்த்தி… அய்யா’ என்றார் அவர்.

அப்போது பேசிய துரைமுருகன், ‘‘நான் உன்னை கட்சியில் இருந்து நீக்கினேன். இப்போதும், பேசிய பேச்சுக்கு நீக்க வேண்டும். காரணம், எதிர்க்கட்சியில் நிற்கின்ற வேட்பாளர்களை ‘அசடு’ போன்ற வார்த்தைகளை சொல்லி பேசுவது கண்ணியமாகாது.

தி.மு.க

அவர்கள் கட்சியில் அவர்கள் நிற்கிறார்கள். நம்முடைய கட்சியில் நாம் நிற்கிறோம். நம்முடைய கொள்கைகளை நாம் சொல்ல வேண்டுமே தவிர இன்னொருவரை இழித்தும் பழித்தும் பேசுவது கழகத்துக்கு உகந்ததல்ல.

தம்பி, இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இனி, எந்த இடத்திலும் எதிர்த்து நிற்பவர்களை தகாத வார்த்தைகளால் பேசக் கூடாது. காரணம், 1967-ம் ஆண்டில், காமராஜர் விருதுநகரில் போட்டியிட்டார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

மாணவரணி செயலாளராக இருந்த சீனிவாசன் என்பவர் அவரை எதிர்த்து நின்றார். அப்போது, ‘காமராஜர் போன்றோரெல்லாம் ஜெயித்து வந்தால் தான் சட்டமன்றம் சட்டமன்றமாக இருக்கும். ஜனநாயகமும் இருக்கும்’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

அப்போது அண்ணாவுடன் இருந்தவர்கள், ‘காமராஜரை யாராலும் தோற்கடிக்க முடியாது. ஒரு பேச்சுக்கு வேண்டுமானால் சீனிவாசனை நிறுத்தலாம்’ என்றார்கள். ஆனால், விருதுநகரில் சீனிவாசன் வென்றுவிட்டார். காமராஜர் தோற்கடிக்கப்பட்டார்.

ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை பொதுமேடையில் வெளுத்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்

அன்றைய தினம் அண்ணா, கலைஞர் ஆகியோருடன் நாங்களெல்லாம் உட்கார்ந்திருந்தோம்.

பேரறிஞர் அண்ணா, அன்று சாப்பிடவே இல்லை. ‘ஒரு பெருந்தலைவரை தோற்கடித்துவிட்டோம். மாபெரும் பழிக்கு ஆளாகிவிட்டோம்’ என்று வருத்தப்பட்டார். அதுதான் ஜனநாயக பண்பு. ‘அப்படிப்பட்ட தலைவர்களுக்கெல்லாம் நாம் எதிர் வேட்பாளரைப் போடக் கூடாது’ என்றும் பேரறிஞர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை பொதுமேடையில் வெளுத்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்

அதன்படி தான் கலைஞரும் நடந்து கொண்டார். அப்போது பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எனவே, பேசுகிற போது நம்முடைய கருத்துகளை பரிமாறிக்கொள்ள வேண்டுமே தவிர வார்த்தைகள் தடிப்பாக இருக்கக் கூடாது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல பேசுகிற எல்லோருமே கண்ணியத்தோடு பேச வேண்டும் என்று பொதுச்செயலாளராக உத்தரவிடுகிறேன்’’ என்றார்.

Share This Article
Leave a review