ஆண், பெண் சமம் என்பதை உருவாக்கியது திமுக : இதுதான் திராவிட மாடலாட்சி – அமைச்சர் பொன்முடி..!

3 Min Read

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் து.ரவிக்குமார் அவர்களை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பொய்யப்பாக்கம், பொய்யப்பாக்கம் காலனி மற்றும் மேல்பாதி பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. அதன் வேட்பாளராக ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

திராவிட மாடலாட்சி

இவருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று கோலியனூர் ஒன்றியம் பொய்யப்பாக்கம், மேல்பாதி, குரும்பன் கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பொன்முடி;- ஆண், பெண் சமம் என்பதை நிலை நிறுத்தியது திமுக ஆட்சி.

அமைச்சர் பொன்முடி

இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதனால் தாய்மார்களுக்கு தமிழகம் முதல்வர் எவ்வளவோ செய்திருக்கிறார். அதிமுக தனது ஆட்சி காலமான 10 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை.

மாநில வளர்ச்சிக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்க திராணியில்லாத ஒரு அரசாக செயல்பட்டது. தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை திமுக கொண்டு வர எடப்பாடி காரணம் என கூறுகிறார். அவரது ஆட்சியில் இதை செயல்படுத்தி இருக்கலாமே.

விசிக பானை சின்னம்

இங்கிருக்கும் அத்தனை திட்டமும் திமுக காலத்தில் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சி எப்போதும் சொன்னதை செய்யக் கூடியது. நாங்கள் வென்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் செயல்படுத்தப்படும் என அறிவித்தோம்.

அதேபோல சொன்னதை செய்கின்ற தலைவர் சொன்னபடி ஆட்சி பொறுப்பு ஏற்றதும் செய்தார். அதேபோல காலை சிற்றுண்டி திட்டம் பள்ளி செல்லும் குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க உதவுகிறது.

அமைச்சர் பொன்முடி

இதன் தாக்கம் இந்தியா கடந்து கனடா வரை சென்றடைந்துள்ளது. அதுவே இந்த திட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எல்லோரும் சமம் என்பது தான் சமூக நீதியின் கொள்கை. எனவே அதன்படி எல்லோருக்கும் எல்லாம் சென்றடைய பாடுபடுகிறோம்.

நம்முடைய வேட்பாளர் ரவிக்குமார் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு பெற்றவர். இந்த பகுதி மக்களுக்காக தனது நிதியிலிருந்து ஏராளமான நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளார். அதனை நினைத்து பார்த்து வாக்களியுங்கள்.

திமுக , விசிக

இந்தமுறை போட்டியிடுபவர்களில் வேற எதுவும் தேறாது பானை தான் வெற்றி பெறும் எனக் கூறினார். கொரோனா காலத்தில் நான்காயிரம் ரூபாயும் மகளிர் உரிமை துறையாக ரூபாய் ஆயிரமும் வழங்கியவர் தமிழக முதல்வர்.

மேலும் விடுபட்டு போன மகளிருக்கு தகுதி அடிப்படையில் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். விழுப்புரத்தில் பொறியியல் கல்லூரி மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது.

ஆண் பெண் சமம் என்பதை உருவாக்கியது திமுக : இதுதான் திராவிட மாடலாட்சி – அமைச்சர் பொன்முடி

திமுக ஆட்சி செய்ததை சொல்லி வாக்கு கேட்கிறோம். அதிமுக 4 ஐந்தாக உடைந்து போய் உள்ளது மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டுமென்றால் நீங்கள் பானை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ரவிக்குமார் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அதேபோல காலை சிற்றுண்டி திட்டம் பள்ளி செல்லும் குழந்தைகள் பசியின்றி கல்வி கற்க உதவுகிறது.

விசிக பானை சின்னம்

இதன் தாக்கம் இந்தியா கடந்து கனடா வரை சென்றடைந்துள்ளது. அதுவே இத்திட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எல்லோரும் சமம் என்பது தான் சமூக நீதியின் கொள்கை. எனவே அதன்படி எல்லோருக்கும் எல்லாம் சென்றடைய பாடுபடுகிறோம்.

நம்முடைய வேட்பாளர் ரவிக்குமார் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு பெற்றவர்.

அமைச்சர் பொன்முடி

இந்தப் பகுதி மக்களுக்காக தனது நிதியிலிருந்து ஏராளமான நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளார். அதனை நினைத்து பார்த்து வாக்களியுங்கள். இந்தமுறை போட்டியிடுபவர்களில் வேற எதுவும் தேறாது பானை தான் வெற்றி பெறும் எனக் கூறினார்.

Share This Article
Leave a review