2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் ஜெகத்ரட்சகனே வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் சோளிங்கர் கிழக்கு ஒன்றியச் செயலாளரான ஏ.எல்.விஜயன், பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக பேராசிரியை அப்சியா நஸ்ரின் என மொத்தம் 26 பேர் களமிறங்கியுள்ளனர். இம்முறை அரக்கோணம் தொகுதியில் 11,59,441 (74.19%) வாக்குகள் பதிவாகியிருந்தன. இதுவே கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 11,78,060 (81.5 %) வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் மூன்றாவது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 79,822 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அவரை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் விஜயன் 37,202 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பாமக வேட்பாளர் பாலு 31,614 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்திலும் உள்ளனர். அந்த வகையில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 42,620 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாக்கு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இரண்டாம் சுற்று முடிவில், திமுக வேட்பாளர், ஜெகத்ரட்சகன் 28,026 வாக்குகள் பெற்று 15275 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
அவரை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் விஜயன் 12,751 வாக்குகளும், பாமக வேட்பாளர் பாலூ 10,556 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாக்கு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவில், திமுக வேட்பாளர், ஜெகத்ரட்சகன் 27,205 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

அவரை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் விஜயன் 12,214 வாக்குகளும், பாமக வேட்பாளர் பாலூ 10,640 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 4,238 வாக்குகளும் பெற்றுள்ளனர். அந்த வகையில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 14,991 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.