கோயம்புத்தூரில் திமுக கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்று வருகிறார். தபால் வாக்குகள் முடிந்து முதல் கட்ட வாக்குகள் எண்ணப்படும் நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர் முன்னிலை வகித்து வருகிறார்.
5000 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார். அதிமுக சிங்கை 2200 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 1500-க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்று கோவை ஆகும்.

கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் களமிறக்கப்பட்டார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.
அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸாக களமிறக்கப்பட்டார்.

கடுமையான மும்முனை போட்டி நிலவும் இந்த தொகுதியில் திமுகவின் கை ஓங்கி உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் சிங்கை கடுமையான போட்டி அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இன்று எண்ணப்படும் வாக்குகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாம் தமிழர் சார்பாக இங்கே கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகிறார். கோயம்புத்தூரில் திமுக கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றார்.