பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை..!

2 Min Read

பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் திமுக மூத்த தலைவரும் தமிழக அமைச்சருமான கே.என் நேரு மகன் அருண் நேரு, பாஜக சார்பில் டிஆர் பாரிவேந்தர் களத்தில் உள்ளனர். தற்போது வரை அங்கே திமுகவின் அருண் நேரு முன்னிலை பெற்றுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் அருண் நேரு (திமுக), என்.டி.சந்திரமோகன் (அதிமுக), டி.ஆர்.பாரிவேந்தர் (பாஜக),​​தேன்மொழி (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர்.

மக்களவை தேர்தல்

திமுக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா மூன்று முறை எம்பியாக இருந்த தொகுதி இதுவாகும். முன்பு இது தனி தொகுதியாக இருந்த நிலையில், 2009-க்கு பிறகு இது பொது தொகுதியாக மாற்றப்பட்டது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வென்றிருந்தார்.

இப்போது 5 ஆண்டுகள் கழித்து அதே பாரிவேந்தர் இங்கு பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தமிழக அமைச்சர் கே.என் நேருவின் மகன் அருண் நேரு இங்குப் போட்டியிடுகிறார்.

திமுக

இந்த பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளும் இப்போது திமுக வசமே உள்ளன. அது திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு சாதகமாக இருக்கிறது.

இன்று காலை முதல் அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தற்போது வரை திமுகவின் அருண் நேரு 2,35,463 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 83,743 தொகுதிகளைப் பெற்றுள்ள நிலையில், பாஜகவின பாரிவேந்தர் 85,492 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 44,643 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை

பெரம்பலூர் தொகுதியில் திமுக தான் அதிகபட்சமாக திமுகதான் அதிக முறை வென்றிருக்கிறது. அங்கு திமுக 8 முறை வென்றுள்ள நிலையில், அதிமுக 6 முறை வென்றுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சி பெரம்பலூர் தொகுதியில் 2 முறை மட்டும் வென்றுள்ளது.

அதேபோல நடிகர் நெப்போலியனும் கடந்த 2009இல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இப்படி திமுக ஆதிக்கம் செலுத்திய தொகுதியான இந்த பெரம்பலூரில் இந்த முறை யார் வெல்வார் என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

Share This Article
Leave a review