திமுக கூட்டணி : தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி நாட்ட உறுதியாக இருப்போம் – மதிமுக..!

2 Min Read

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்கொடி நிலைநாட்ட உறுதியாக இருப்போம் என்று மதிமுக அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

மதிமுக நிர்வாகக்குழு அவசர கூட்டம் எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர் ஜூனராஜ் தலைமை தாங்கினார்.

திமுக கூட்டணி : தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி நாட்ட உறுதியாக இருப்போம் – மதிமுக..!

தற்போது பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மை செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி. ஆடுதுறை முருகன், தி.மு.ராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திமுக கூட்டணி : தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி நாட்ட உறுதியாக இருப்போம் – மதிமுக..!

இந்த கூட்டத்தில், இந்திய நாட்டை சூழ்ந்திருக்கின்ற பாசிச இருளை போக்கி, ஜனநாயக வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு இமயம் முதல் குமரி வரை ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய வரலாற்றுக சுடமை இருக்கிறது.

அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும் பாஜக தலைமையிலான அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றியே ஆகவேண்டும்.

திமுக கூட்டணி : தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி நாட்ட உறுதியாக இருப்போம் – மதிமுக..!

இந்த நோக்கத்தோடு தேசிய மற்றும் மாநில கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா கூட்டணி’ 18-வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

தமிழ் நாட்டில் திமுக தலைமையில் இயங்கி வரும் ‘இந்தியா கூட்டணி’ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும். என்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறது. ஒன்றிய பாஜக
அரசு உடனடியாக கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்.

திமுக கூட்டணி : தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி நாட்ட உறுதியாக இருப்போம் – மதிமுக..!

தமிழ்நாடு அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மதிமுக நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது.

புதுச்சேரி மாநிலமே கொந்தளிப்பாக உள்ள சூழலில், அந்த மாநில அரசு விரைந்து செயல்பட்டு சிறுமியை பாலியல் வன்முறையிலும், படுகொலையிலும் ஈடுபட்ட கொடியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share This Article
Leave a review