சென்னையில் விஜயகாந்த் தலைமையில் நேற்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரேமலத கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சென்னை திருவேற்காடு பெருமாள் நகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிகவின் 18 வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே சதீஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட 2000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை எடுத்து காலை 11:40 மணியளவில் விஜயகாந்தை பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு காரில் அழைத்து வந்தனர். அவரை காண மண்டபத்தின் வாசலில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு இருந்தனர்.

அப்போது பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுக்குழு நடைபெறும் மேடைக்கு விஜயகாந்தை அழைத்து வந்து பிரேமலதா அருகில் அமர வைத்தனர். அவரைப் பார்த்ததும் மண்டபத்தில் இருந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் உற்சாக குரல் எழுப்பினார்கள். தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடைக்கால நிவாரணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும். நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்தினால் தேமுதிக சார்பில் போராட்டம் நடத்துவது. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் தலா ரூபாய் 1000 உதவித்தொகை வழங்க வேண்டும். திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது எடுத்து பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

அப்போது விஜயகாந்த் காலை தொட்டு பிரேமலதா வணங்கினார். அதை தொடர்ந்து நிர்வாகிகள் பிரேமலதாவுக்கும், விஜயகாந்துக்கும் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரேமாதா பேசியதாவது; அவர் ஆரம்பித்த இந்த கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்ற ஒரே உறுதி தான் எங்களிடம் இருக்கிறது. இந்த பொதுச் செயலாளர் பதவி மலர் கிரீடம் கிடையாது. முள் கிரீடம் மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளீர்கள். எதற்கும் நான் அஞ்ச மாட்டேன் என்பதை மட்டும் உங்களிடம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்றைக்கும் உங்கள் அணியாக உறுதுணையாக இருந்து தலைவர் கொடுத்த வேலையை சரியாக செய்வேன். விஜயகாந்த் குறித்து ஏதேதோ வதந்திகள் பரப்பப்பட்டன. யூடிபில் வெளியான செய்திகளால் மிகவும் வருந்தினேன். எனவே தயவு செய்து யார் மனதின் புண்படுத்தும் அளவுக்கு எந்த செய்தியும் வெளியிட வேண்டாம். யார் யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்தும் கட்சியை கரை சேர்க்கவே அமைதியாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக விவாதிப்போம்.
தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். நாம் அனைவரும் இணைந்து புதிய வியூகத்தை அமைப்போம். இதுவரை நாம் ஒரு எம்.பி சீட் கூட வெற்றி பெறவில்லை. 2024ல் உறுதியாக நமது கட்சியின் எம்.பி.க்கள் டெல்லி செல்வார்கள். அனைத்து கட்சிகளும் நம்முடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறது. தே.மு.தி.க இல்லாமல் முடிவு எடுக்க முடியாத நிலையில் கட்சிகள் உள்ளன. 2024 நமது லட்சியம் 2026 இல் நமது ஆட்சி நிச்சயம். புதிய முறையில் கட்சியின் தலைமை அலுவலகத்தை கட்ட இருக்கிறோம். வெகு விரைவில் பல புதிய பதவிகள் அறிவிக்கப்படும். கூட்டணிக்கு வருவோர் எங்களது விருப்பத்திற்கு ஏற்ப தொகுதியை தர வேண்டும். தமிழக மக்களுக்கு நல்லது செய்பவர்கள் பக்கத்தில் தேமுதிக நிற்கும். லட்சியத்தை அடையும் வரை நமக்கு ஓய்வில்லை. தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் இருக்கையில் அமர வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.