தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி மோதிரம் துண்டுடன் உடல் அடக்கம்” பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்..!

3 Min Read

கட்சிக்காகவும், மக்களுக்காவும் வாழ்ந்த தேமுதிக தலைவரை கட்சி மோதிரத்துடனும், கட்சி துண்டுடனும் நல்லடக்கம் செய்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (டிச.28) அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்

கட்சிக்காகவும், மக்களுக்காவும் வாழ்ந்த தேமுதிக தலைவரை கட்சி மோதிரத்துடனும், கட்சி துண்டுடனும் நல்லடக்கம் செய்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முழுஅரசு மரியாதையுடன் நடைபெற்ற இந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு தனது மரியாதையை செலுத்தினார். அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முக்கிய சொந்தங்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இறுதி சடங்கு நிகழ்வுக்குப் பிறகு, தேமுதிக தலைமை அலுவலத்தில் கூடியிருந்த மக்களிடையே பேசிய, தேமுதிக கட்சித் தலைவர் பிரேமலதா, ” முழு அரசியல் மரியாதையுடன் கேப்டன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் ஏற்பட்ட இடநெருக்கடியை முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக கொண்டு சென்றதாகவும், உடனடியாக அவரது உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி மோதிரம் துண்டுடன் உடல் அடக்கம்

சிறப்பான முறையில் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்துதந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்தாலினுக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் தேமுதிக சார்பில் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். ஒரே இரவில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுக்கும், சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்தனை காவல்துறை அதிகாரிகளுக்கும் தேமுதிகவின் சார்பில் ராயல் சல்யூட் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர்; இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத பிரியாவிடை நமது தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்டனின் இறுதி அஞ்சலி மிகவும் உணர்வுபூர்வமானதாக அமைந்தது. அதற்கு, கேப்டன் செய்த தர்ம காரியங்களும், அவருடைய நல்ல எண்ணங்களும் தான் மிக முக்கியமான காரணம் என்று தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்

21 குண்டுகள் முழங்க அரசாங்க மரியாதையுடன், சந்தனப் பேழையில் வைத்து கேப்டன் நல்லடக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்த அவர், “தான் ஆரம்பித்த கட்சியின் வேஷ்டியுடனும், தேமுதிக சின்னம் பொருந்திய கை மோதிரத்திடனும் தான் கேப்டனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இன்று நமக்கு மிகவும் சோகமான நாளாகும் என்று தெரிவித்த அவர், தலைவரின் கனவுகளை வெற்றி பெற செய்து , அந்த வெற்றியை அவர் பாதத்தில் சமர்ப்பிப்பதை நாம் லட்சியமாக கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார். கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே, அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்றும் ஒட்டுமொத்த தொண்டர்கள் வருகை புரிந்து வழிபடும் கோயிலாக நினைவிடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Share This Article
Leave a review