சி பிரிவு மற்றும் துணை ராணுவப் படையினர் உட்பட மத்திய அரசு ஊழியர்களுக்கு , தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான உற்பத்தி அல்லாத போனஸை கணக்கிடுவதற்கான உச்சவரம்பை 7000 ரூபாயாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
அலுவலக குறிப்பில், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறையானது, 2022-23 ஆம் ஆண்டிற்கான 30 நாள் ஊதியங்களுக்கு சமமான உற்பத்தித் திறன் இல்லாத போனஸ்குரூப் ‘சி’ மற்றும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது , இது குரூப் B’ இல் உள்ள கெசட்டட் பணியாளர்களுக்கு இந்த போனஸ் பொருந்தாது .
இந்த போனஸ் பெறுவதற்கு மைய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது
* 31.3.2023 அன்று பணியில் இருந்த மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து சேவை செய்த பணியாளர்கள் மட்டுமே இந்த போனசை பெற தகுதியுடையவர்கள்.
* அலுவலகங்களில் 6 வாரத்திற்குப் பிறகு குறைந்தபட்சம் 240 நாட்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த சாதாரண தொழிலாளர்கள் இந்த போனஸ் பெற தகுதியுடையவர்கள் என கருதப்படுவர் .
* டிசம்பர் 16, 2022 தேதியிட்ட செலவினத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி இந்தக் கணக்கிற்கான செலவினம் துறை தலைமை அதிகாரிகளுக்கு பற்று வைக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அரசாணைப்படி , இந்த தற்காலிக போனஸின் கணக்கில் ஏற்படும் செலவினம், நடப்பு ஆண்டிற்கான சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகளின் அனுமதிக்கப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்து ஈடுசெய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது