தஞ்சை பூம்புகார் நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள் கண்காட்சி- விற்பனை மாவட்ட ஆட்சியர் பிரியங்காபங்கஜம் தொடங்கி வைத்தார்.

1 Min Read
  • தஞ்சை பூம்புகார் நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள் கண்காட்சி- விற்பனை
    மாவட்ட ஆட்சியர் பிரியங்காபங்கஜம் தொடங்கி வைத்தார்.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரிப் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இவ்விழா “நவராத்தரி” என்ற பெயரிலும் கர்நாடகத்தில் “தசரா” என்ற பெயரிலும் குஜராத்தில் “தாண்டியா” என்ற பெயரிலும் மேற்கு வங்கத்திலும் வடஇந்தியாவின் பிறபகுதிகளிலும் “துர்கா பூஜை” என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்தில், தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி “கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது ‌.
இதனை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கொலு கண்காட்சியில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கள், கொல்கத்தா களிமண் போன்ற கைவினைப்பொருட்களினால் தயரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கொலுப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள்அஷ்டதிக் பாலகர்கள் அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், தசாவதாரம் செட் உள்பட பல்வேறு வகையான கொலு பொம்மைகள் உள்ளன.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி மற்றும் விற்பனை இன்று முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review