Thiruvallur: விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் அதிக அளவில் வரி வசூல் செய்வதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

2 Min Read
பொதுமக்கள்

திருவள்ளூர் அடுத்த‌‌கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரம்பாக்கம் ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வார சந்தையில் ஒரு கடைக்கு ரூபாய் 50 முதல் 100 வரையிலும் ஒரு லாரிக்கு 200 ரூபாயும் மற்றும் ஈச்சர் வேனுக்கு 100 ரூபாய் வாடகை கார்கள் மற்றும் வேன்களுக்கு 50 ரூபாய் ஆட்டோக்களுக்கு 20 ரூபாய் என அதிக அளவில்  வரி வசூல் செய்யப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சதீஷ் என்பவர் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் பேரம்பாக்கத்தில்‌வரி வசூல் செய்வதற்கான‌‌ஒப்பந்தம் எடுத்த நபர் ஒப்பந்த காலம் முடிந்த நிலையிலும் அடாவடியாக வரிவசூல் செய்து வருவதாகவும்  இந்த ஆண்டுக்கான ஒப்பந்த ஏலத்தை தவிர்த்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

‌                                                                       Upload

ஆட்சியரிடம் மனு

இதனை அடுத்து‌மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஒன்றிய அதிகாரிகள் அந்த ஏலத்தை தடுத்து நிறுத்தினர் இருப்பினும் தொடர்ந்து வாகன வரி வசூல் நடைபெற்று வருவதாகவும்‌‌இந்த வாகன வரி வசூல் மூலம் பேரம்பாக்கம் ஊராட்சிக்கு வருவாய்  இயன்றாலும் பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்த நில விளைச்சலில் இருந்து கொண்டுவரப்படும்‌‌காய்கறிகளை விற்பனை செய்வதற்காக வரும் விவசாயிகளிடமிருந்து  வரி வசூலில் செய்வதால் விவசாயிகள் மனரீதியாக பாதிக்கின்றனர்.

‌                                                                       Upload

ஆட்சியர் அலுவலகம்

மேலும் தனியார் தொழிற்சாலை வாகனங்களில் வரி வசூல் செய்வதால் அந்த வாகனங்கள் ஊருக்குள் நுழைவதில்லை இதனால்  ஸ்ரீ பெருமந்தூர், மப்பேடு,இருங்காடு கோட்டை‌‌போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும்‌‌தொழிலாளர்கள் நீண்ட தொலைவு நடந்து சென்று வாகனத்தில் ஏரி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது ஆகையால் வாகன வரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

Share This Article
Leave a review