நடிகர் சூர்யா குடும்பத்துடன் கீழடி வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் மனைவி ஜோதிகா மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறினார். சிவக்குமாருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால்தான் சூர்யாவை ஜோதிகா மும்பைக்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள், மகன் மற்றும் அப்பா, அம்மாவுடன் கீழடி அருங்காட்சியத்திற்கு சென்றார்.
சூர்யாவின் கீழடி விசிட் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சூர்யா திடீரென கீழ்டி வந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். அவர் பேசியிருப்பதாவது, கீழடி அருங்காட்சியத்திற்குள் செல்ல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சூர்யா குடும்பத்தினரிடம் யாரும் கட்டணம் வசூலிக்கவில்லை.

சூர்யா குடும்பத்தினரின் வருகையால் பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் பல மணிநேரம் வெளியே வெயிலில் கால் கடுக்க காத்திருந்தனர்.
இது சர்ச்சையாகியும் சூர்யா அதுகுறித்து வாய் திறக்கவில்லை. சூர்யா பெற்றேரை பிரிந்து மும்பையில் குடியேறிவிட்டார். பிள்ளைகளையும் அங்கேதான் படிக்க வைத்து வருகிறார்.
சூர்யா இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்ற பேச்சு எழுந்ததால் அந்த அவப்பெயரை மாற்றிக்கொள்வதற்காகதான் கீழடிக்கு வந்தார். இவ்வாறு பயில்வான் ரங்கனாதன் கூறினார்.
ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் சூர்யா தரப்பிலிருந்தோ அல்லது சிவகுமார் தரப்பிலிருந்தோ இன்னும் தெரிவிக்க படவில்லை எது எப்படியோ, இந்த மாதிரி செய்திகளைத் தான் சினிமா ரசிகர்கள் விரும்புகிறார்கள்.