தருமபுரி மாவட்டத்தில் சந்து கடைகளுக்கு அதிக அளவு மதுபான பாட்டில்களை விநியோகம் செய்யும் அரசு மதுபான கடை ஊழியர்கள் சந்துக்கடை வியாபாரிகளிடம் மாமூலை உயர்த்திக்கேக்கும் மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகளின் வைரல் ஆடியோ.
தமிழகம் முழுவதும் மதுபான கடைகளை தமிழக அரசே எடுத்து நடத்தி வருகிறது. அரசு மதுபான கடைகளில் நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுபான கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் 66 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளின் மூலம் அதிக வருவாய் ஈட்டப்பட வேண்டும் என மாவட்ட மேலாளர் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் அரசு மதுபான கடைகள் இருப்பதால் அதிக அளவு சந்துக்கடைகள் உள்ளது மாவட்ட காவல்துறை அவ்வப்போது ஒரு சில சந்துக்கடைகளில் உள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்து, பெயர் அளவிற்கு கைது நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பெண்ணாகரம் அருகே உள்ள மடம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் பெண்ணாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சந்து கடைகளுக்கு அதிக அளவு அரசு மதுபான பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் உள்ள சந்துக்கடை உரிமையாளர்களிடம் மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள் இனி வரும் மாதங்களில் மாமூலை உயர்த்தி தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஒரு சிலர் பத்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை தருவதாக மதுவிலக்கு காவல்துறையினர் பேசும் ஆடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சந்துக்கடைகளை முற்றிலுமாக ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.