தனுஷ் நடிக்கும் 50-வது படம் ‘ராயன்’ – ப்ரஸ்ட் சிங்கிள் ரிலீஸ்..!

1 Min Read

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -
Ad imageAd image

தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50-வது படமான ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

ராயன் திரைப்படம்

பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் ராயன். இதில் ஹீரோவாக தனுஷும் லீடிங் ரோலில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் உள்ளிட்ட சிலரும் நடித்துள்ளனர். தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ராயனுக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வட சென்னையை பின்னணியாகக் கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் ராயன் படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இதனால் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ராயன் திரைப்படம்

இந்த நிலையில், ராயன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் ‘அடங்காத அசுரன்’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடலுக்கான வரிகளை தனுஷ் எழுதியுள்ளார்.

அதேபோல், பிரபுதேவா கோரியோகிராபி செய்ய, ஏஆர் ரஹ்மானும் தனுஷும் இணைந்து பாடியுள்ளனர். போகி பண்டிகை பின்னணியில் நைட் விஷுவல் ட்ரீட்டாக வெளியாகியுள்ளது ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.

ராயன் திரைப்படம்

தனுஷும் ஏஆர் ரஹ்மானும் இந்தப் பாடலை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிளுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் ஜூன் 13 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இதனால் அடுத்தடுத்து ராயன் படத்தில் இருந்து அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ராயனுக்குப் போட்டியாக சீயான் விக்ரம் பா. ரஞ்சித் கூட்டணியில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படமும் ஜூன் 13 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

Share This Article
Leave a review