பேரணாம்பட்டு மலைப்பகுதியில் 2000 லிட்டர் கள்ளச்சாராயம் உறல் அழிப்பு – 3 பேர் மீது வழக்கு பதிவு..!

1 Min Read

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் 2000 லிட்டர் கள்ளச்சாராயம் உறல் அழிப்பு. ஒரு பெண் உள்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை.

- Advertisement -
Ad imageAd image

வேலூர் மாவட்டம் அடுத்த பேரணாம்பட்டு சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்வதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களுக்கு ரகசிய தகவல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் 2000 லிட்டர் கள்ளச்சாராயம் உறல் அழிப்பு

அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையில் மதுவிலக்கு போலீசார் பேரணாம்பட்டு மலைப்பகுதியான பன்னீர் குட்டை பள்ளம், சூரிய மக்கா ஆகிய மலைப்பகுதிகளில் கள்ளச்சாராய ரெய்டு நடத்தினர்.

அப்போது மலை பகுதிகளுக்கு அடியே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 2000 லிட்டர் கள்ளச்சாராய உறல் கீழே கொட்டி அழித்தனர்.

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் 2000 லிட்டர் கள்ளச்சாராயம் உறல் அழிப்பு

போலீசார் வருவதை கண்டு கள்ளச்சாராய உறல் பதுக்கி வைத்திருந்த கோட்டை காலனி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த கண்மணி மற்றும் மணிமாறன் ஆகியோர் தப்பினர்.

அப்போது தப்பி ஓடிய ஒரு பெண் உள்பட மூன்று பேர் மீது குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மதுவிலக்கு போலீசார்

அதை தொடர்ந்து பேரணாம்பட்டு மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு பகுதிகளுக்கு லாரி ட்யூப்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்வது தொடர் கதையாகவே இருப்பதாகவும்,

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Article
Leave a review