IPL 2023 : டெல்லி அணிக்கு ஹாட்-ரிக் தோல்வி

1 Min Read
டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி தொடர்ந்து 3 ஆவது தோல்வியை நேற்று சந்தித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.

- Advertisement -
Ad imageAd image

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச ராஜஸ்தான் அணி ஜெட் வேகத்தில் ரன்களை குவித்தது. 8.3 ஓவரில் அணி 98 ரன்கள் எடுத்திருந்தபோது யஷஸ்வி 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளிக்க கடைசி நேரத்தில் ஷிம்ரோன் ஹெட்மேயர் அதிரடி காட்டினார்.

சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் 51 பந்தில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹெட்மேயர் 39 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ராஜஸ்தான் அணி 199 ரன்கள் குவித்தது. பவுலிங்கில் டெல்லி அணியின் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களத்தில் இறங்கியது. ஏற்கனவே டெல்லி அணி பலவீனமாக கருதப்பட்ட நிலையில், அதனை உறுதிபடுத்தும் விதமாக இன்றைய ஆட்டம் அமைந்தது.

200 ரன்னை இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களில் டேவிட் வார்னர் 65 ரன்னும், லலித் யாதவ் 38 ரன்னும், ரிலீ ரூசோ 14 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஏற்கனவே விளையாடிய 2  போட்டிகளில் டெல்லி தோல்வியடைந்த நிலையில் இது 3 ஆவது தோல்வியாக அமைந்தது.

Share This Article
Leave a review