அவதூறு வழக்குகள் விசாரணை : விழுப்புரம் கோர்ட்டில் சி.வி சண்முகம் நேரில் ஆஜர்..!

2 Min Read

விழுப்புரம் கோர்ட்டில் 7 அவதூறு வழக்குகள் விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் நேரில் ஆஜரானார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அதிமுக சார்பில் நாட்டார் மங்கலம் ஆரோவில் கோட்டகுப்பம், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட 4 இடங்களில் நடந்த பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்.பி தமிழ்நாடு அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாகவும் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக 4-வது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வாழ்க்கை நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி சண்முகம் எம்.பி நேரில் ஆஜரானார். பழைய பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கியதை சி.வி சண்முகம் பெற்றுக் கொண்டார். பின்னர் அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் சீனிவாசன் ராதிகா, செந்தில் உள்ளிட்டவர்கள் ஆஜராகி வாதிட்டனர்.

விழுப்புரம் கோர்ட்டில் சி.வி சண்முகம் நேரில் ஆஜர்

அப்போது நாட்டார்மங்கலம் ஆராவில் பகுதியில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பு வரும் வரை இந்த இரு வழக்கிலும் சாட்சிகள் விசாரணை ஒத்திவைக்கப்படும் என்று வாதிட்டனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வரும் 18 ஆம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதேபோல் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் எம்.பி மீது தொடரப்பட்ட 3-வது வழக்குகள் விசாரணை மாஜிஸ்திரேட் ராதிகா முன்னிலையில் வந்தது. இந்த விசாரணையின் போது சி.வி சண்முகம் எம்.பி நேரில் ஆஜரானார். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 2 அவதூறு வழக்குகளில் ஒரு வழக்குக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

விழுப்புரம் கோர்ட்டில் சி.வி சண்முகம் நேரில் ஆஜர்

அதனை தொடர்ந்து மற்றொரு வழக்கிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணை நிலுவையில் உள்ளது. 3-வது வழக்கில் சம்மன் கிடைக்கப் பெறவில்லை என்று வாதிட்டனர். இதனை கேட்டு அறிந்த மாஜிஸ்திரேட் ராதிகா வழக்கு விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனிடையே இந்த நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 3-வது அவதூறு வழக்கு வானூர் அதிமுக எம்.எல்.ஏ சக்ரபாணியும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் அவரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.

Share This Article
Leave a review