விவசாய நிலங்கள் பாதிப்பு .! குவாரி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு.

2 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  • தேனி மாவட்டம் அல்லி நகரம் பகுதியில் சட்ட விரோத குவாரி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு. சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தங்களது பணியை இழக்க நேரிடும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.

சட்ட விரோத குவாரிகள் நடைபெறுவதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- நீதிபதிகள். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் வருவாய் துறை செயலர் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம், தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு. தேனி மாவட்டத்தை சேர்ந்த மகாராஜன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு.

- Advertisement -
Ad imageAd image
சென்னை உயர்நீதிமன்றம்

தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி அரசு அனுமதி அளித்துள்ள அளவை விட, விதிமுறைகளையும் பின்பற்றாமல் அளவுக்கு அதிகமாக சுமார் 32,000 யூனிட் அளவிலான உடைகற்கள் மற்றும் மண் எடுத்துள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாறைகளை உடைப்பதற்காக நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தி உள்ளதால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமவாசிகள் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சட்ட விரோதமாக அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் கற்களை வெட்டி எடுத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தேனி மாவட்டம் அல்லி நகரம் அருகே சட்ட விரோத குவாரி நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனதார தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோத குவாரி நடைபெறுவதால் அருகில் உள்ள கிராமங்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படவதால் என்று, அதற்கான ஆவணங்களை நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது, எனவே சட்ட விரோத குவாரி நடத்துபவர்கள் மீது
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்: சட்டவிரோத குவாரி செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என வாதிடப்பட்டது.

தொடர்ந்து தலைமை நீதிபதி: இதுபோன்று சட்ட விரோத குவாரிகள் நடைபெறுவதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர்க்கு புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் காவல்துறையினர் தங்களது பணியை இலக்க நெறிடும் என்ற நீதிபதிகள்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/upcoming-movies-on-diwali-go-watch-any-movie-heres-the-full-list/

வழக்கு குறித்து ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் வருவாய் துறை செயலர் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம், தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Share This Article
Leave a review