மேகதாதுவில் அணை கட்டக்கூடாது – ஆளுநர் தமிழிசை பேட்டி.. …

2 Min Read

துணைநிலை ஆளுநர் தமிழிசை வைத்த தேனீர் விருந்துக்கு எதிர் கட்சிகள் வரவில்லை என்று கூறுவதை நாகரீக செயலாக இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் குறை கூறியுள்ளார். குடியரசு தினவிழாவையொட்டி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேனீர் விருந்து உள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

குறிப்பாக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயலர் ராஜூவ் வர்மா, டிஜிபி ஸ்ரீநிவாஸ், உள்ளிட்ட பல அரசுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். மேலும் துணைநிலை ஆளுநருடன், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை பாஜகவின் தலைமை அலுவலகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியும், பாஜக மாநிலத் தலைவரை போல ஆளுநர் தமிழிசை செயல்படுவதாக கூறி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேனீர் விருந்தை புறக்கணித்தனர்.

மேலும், விருந்துக்கு பின்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக மாநிலத் தலைவராக இருந்த போது ஒரே நேரத்தில் மூன்று மத்திய அமைச்சர்கள் கையெழுத்திட்டு ஜல்லிக்கட்டுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு முழு முயற்சியை பிரதமர் மோடி மேற்கொண்டார் எனக் கூறினார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை வைத்த தேனீர் விருந்து

அப்போது காங்கிரஸ் கட்சிதான் ஜல்லிக்கட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதாடியது. கொள்கைகள், நடவடிக்கைகள், பதவிகள் மற்றும் கட்சிகள் மாறுப்படலாம் ஆனால் அன்போடு அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக்கொண்டு அன்பை பகிர்ந்து கொள்வதுதான் நல்லது எனக் கூறினார் தமிழிசை சவுந்தரராஜன். அனைத்து செயல்களிலும் அரசியல் அரசியல் என்றால் நல்ல நட்புக்கு மரியாதைக்கும் அடையாளம் இல்லாமல் போய்விடும் என்று கூறினார்.

குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல நன்மைக்காக மாற்று கொள்கையோடு அரசியல் கட்சியினர் நட்புறவோடு பழகி உள்ளனர். இந்த நிலையில் தேனீர் விருந்துக்கு வரவில்லை என்பதை சொல்லுவதை அரசியல் கட்சிகள் நாகரீக செயலாக இருக்கிறது. புறக்கணிப்பு என எடுத்து கொள்ளக்கூடாது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உறுதியாக உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசிடம் புதுச்சேரி சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

Share This Article
Leave a review