கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என instagram, Youtube பிரபலமான ஷர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி சத்திரோடு சங்கனூர் சிக்னல் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது அதனை கேட்ட போது வீடியோ எடுத்து சர்மிளா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாகவும், காவல் உதவி ஆய்வாளரை கடுமையாக விமர்சித்து தனது instagram பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் IPC 506 (i), 509, 66C ஐடி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோவை மாவட்டத்தின் பெண் பேருந்து ஓட்டுனர் என்ற பெயரை பெற்ற ஷர்மிளா திடீரென அவர் ஓட்டிய பேருந்து நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தபோது அதிக அளவில் பேசப்பட்டார். அவர் பேருந்து ஓட்டுநராக இருந்த பொழுது திமுக எம். பி. கனிமொழி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவர் வாகனம் ஓட்டும் போது பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் ஷர்மிளாவை அழைத்து அவருக்கு கார் ஒன்றை அன்பளிப்பாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அந்த காருக்குள் இருந்த படி தான் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரிவை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.