பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, மஞ்சள் கொத்து சாகுபடி- விழுப்புரம்…!

2 Min Read
மஞ்சள் அறுவடை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15, 16 ஆம் தேதிகளில் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் விழாவில் கரும்புக்கு அடுத்து பிரதான இடம் பிடிப்பது மஞ்சள் கொத்து. பொங்கல் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது உங்கள் பானை வெள்ளம் அரிசி அதோடு கரும்பு மஞ்சள் தான். மார்கழி மாத இறுதியில் கரும்பு மஞ்சள் அறுவடை செய்வது வழக்கம் தை திருநாளாம் பொங்கலுக்கு கரும்பு மஞ்சள் விற்பனை அமோகமாக இருக்கும்.

- Advertisement -
Ad imageAd image

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், குச்சிப்பாளையம் போன்ற குறிப்பிட்ட கிராமப் பகுதிகளில் மட்டுமே கரும்புப் பயிரிடுவது போன்று, மாவட்டத்தில் நன்னாடு அருகிலுள்ள ஆலாத்தூர், திருக்கனூர், ராதாபுரம், சின்னகள்ளிப்பட்டு, மழவந்தாங்கல், சின்னமடம், பூவரசன்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்பட்டனர்.

மஞ்சள் அறுவடை

அடுத்ததாக விழுப்புரத்தில் உள்ள பிடாகம், குச்சிபாளையம், அத்தியூர் திருவாதி , மரகதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கரும்பு சுமார் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது இந்த கரும்புகள் முழுவதும் அறுவடை செய்யப்பட்டு விழுப்புரம் திண்டிவனம் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் கரும்பு உடன் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

கடந்தாண்டைக் காட்டிலும் குறைந்த பரப்பளவில்தான் 10 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டுள்ளதால் நிகழாண்டில் சாகுபடி நன்றாக இருந்து நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. பொங்கல் பண்டிகைக்கு எட்டு நாள்களுக்கு முன்னர்தான் அறுவடையைத் தொடங்குவோம். அதன்படி நிகழாண்டில் மஞ்சள் கொத்து அறுவடை செய்து உள்ளூரில் விற்பனைக்கும், வெளியூர் மற்றும் பிற மாவட்ட வியாபாரிகளுக்கும் மஞ்சள் கொத்தை விற்பனை செய்து வருகிறோம்.

கரும்பு அறுவடை

பொங்கலுக்கு இன்னும் இரு நாட்கள் உள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். தற்போது மஞ்சள கொத்து ரூ.25 என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறோம் என்கிறார் ஆலத்தூர் பகுதி விவசாயி ராஜு.

அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு எவ்வளவு முக்கியமோ, அதுபோல மஞ்சள் கொத்தும் முக்கியமான பொருளாகும். எனவே வரும் ஆண்டிலாவது பொங்கல் தொகுப்போடு மஞ்சள் கொத்தையும் சேர்த்து கொடுத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை பயிரிட்டுள்ள விவசாயிகளின் வாழ்வு சிறக்கும் இதை கொள்முதல் செய்வதற்கு அரசு பெரிய தொகை செலவாகாது அரசு நிச்சயம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர் மஞ்சள் கொத்து பயிரிட்டுள்ள விவசாயிகள்.

Share This Article
Leave a review