Cuddalore : “கருடன்” படம் பார்க்க வந்த நரிக்குறவர்கள் அனுமதி மறுப்பு..!

1 Min Read

கடலூர் மாவட்டம், அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் படம் பார்க்க வந்த 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்தனர். அவர்களுக்கு கடலூர் “நியூ சினிமா” திரையரங்கத்தினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

- Advertisement -
Ad imageAd image
“கருடன்” படம் பார்க்க வந்த நரிக்குறவர்கள் அனுமதி மறுப்பு

இதனை தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து எவ்வளவோ முறை கேட்டும் திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுத்து விட்டது. இதனை தொடர்ந்து நரிக்குறவர்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கோட்டாட்சியரிடம் நரிக்குறவர்கள் மனு

காவலர்கள் அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். தற்பொழுது கோட்டாட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் குடும்பத்துடன் காத்திருக்கின்றனர்.

நரிக்குறவர்கள் திரையரங்கில் அனுமதிக்கப்படாத சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review