சிஎஸ்கே வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நேற்று இரவு நடந்த ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன் அணி களமிறங்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. சென்னை அணியின் ஜடேஜா, கடைசி இரண்டு பால்களில் சிக்ஸரையம், பவுண்டரியையும் விளாசி வெற்றியைக் கைப்பற்றி கொடுத்தார். சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். சென்னை அணியின் கேப்டன் தோனியும் கண்ணீர் மல்க, வெற்றியைக் கொண்டாடினார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில்,” கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்குத் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர். பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.