சிஎஸ்கே, மும்பை.! யாருக்கு வெற்றி வாய்ப்பு நாளை பலப் பரீட்சை

2 Min Read
ரோகித் சர்மா எம் ஸ் தோனி

ஐபிஎல் தொடரில் 2 பலமான, வெற்றிக்கரமான அணி என்றாலே, அது மும்பையும், சென்னையும் தான். ரசிகர்கள் மத்தியில் ஆராவாரம் உண்டாக்குவதும்,மாறி மாறி இரு அணி ஆதரவாளர்கள் தங்களை தானே மீம்ஸ்களாலும் வார்தைகளாலும் திட்டித் தீர்த்துக்கொள்வதும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.

- Advertisement -
Ad imageAd image

இப்படி இருக்கையில் நாளை இரண்டு அணிகளும் மோத இருகின்றன. ஐபிஎல் 12வது மேட்ச் –  மும்பை வான்கெடே ஸ்டேடியம் மாலை 7.30க்கு தொடங்கவிருக்கும் இந்த மேட்ச்சுக்கு ரசிகர்களிடத்தில் இப்பொழுதே எதிர்ப்பார்ப்பு ஒட்டிக் கொண்டது.

இந்த அணிகளை சிறிது அலசி ஆராயும் பொழுது. இதுவரை 15 முறை நடைபெற்ற தொடரில், மும்பை 5 முறை, சிஎஸ்கே 4 முறை என இரு அணிகளும் இணைந்து 9 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி இருக்கிறாகள். ஆனால் கடைசி சீசனில் இரண்டு அணிகளும் சரி அடி வாங்கியது. விளையாடிய 14 போட்டிகளில் இரு அணிகளும் தலா 10 போட்டியில் தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி 9வது இடத்திலும், மும்பை அணி 10வது இடத்திலும் இருந்தது.

இதனால் இரு அணிகளும் இழந்த பெருமையை மீட்க போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. டாப் 2 அணிகளாக மும்பையும், சிஎஸ்கே வும் மோதும் போது, இதன் டிஆர்பி பறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிக மக்கள் இந்தப் போட்டியை பார்ப்பார்கள்.இந்த நிலையில், இரு அணியிலும் யார் கெத்து என்று பார்த்தால் மும்பை அணியின் கையே ஓங்கி இருக்கிறது. மும்பை, சிஎஸ்கே அணிகள் இதுவரை 34 முறை ஐபிஎல் தொடரில் மோதியுள்ளன.

இதில் சிஎஸ்கே 14 முறையும், மும்பை அணி 20 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் கடைசி 10 ஆண்டுகளில் மும்பை அணியில் செயல்பாடு வேற லெவலில் உயர்ந்துள்ளது. தோனிக்கு ஒரே ரெக்கார்ட் குறையாக இருக்கிறது என்றால், அது இது தான். ஐபிஎல் தொடரில் மும்பை அணியிடம் மட்டும் தான் சிஎஸ்கே அதிக முறை தோல்வியை தழுவி இருக்கிறது. இதில் 2019ஆம் ஆண்டில் மும்பை அணி சிஎஸ்கேவை எதிர்கொண்ட 4 போட்டியிலும் வென்று இருக்கிறது.

ஆனால் அதன் பிறகு ஒவ்எவாரு சீசனிலும் இரு அணிகளும் தலா இரண்டு முறை மோதியுள்ளன. அதில் சிஎஸ்கே ஒரு முறையும்,மும்பை அணி ஒரு முறையும் வென்று இருக்கிறது . இதையெல்லாம் வைத்து பார்க்கையில் இம்முறை தோனி மும்பையை வீழ்த்தியே ஆக வெண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எப்படி இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்களே அல்ல என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.

Share This Article
Leave a review