உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் கூறியுள்ளது.
வாஷிங்டன் புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை, 800 கோடியை தாண்டும் எனவும், நடப்பாண்டில் மட்டும் உலக மக்கள் தொகை, 7.5 கோடி அதிகரித்து உள்ளதாகவும், அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக மக்கள் தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியை கடந்து விட்டது. கடந்த ஆண்டு நவ., மாதமே உலக மக்கள் தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா., சபை மதிப்பிட்டு இருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால், இந்த முரண்பாடு நிலவுகிறது. உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது.

புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டும் எனவும் நடைபாண்டில் மட்டும் உலக மக்கள் தொகை 7.5 கோடி அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்கா மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பின் அறிக்கையில் மேலும் கூறியுள்ளது. நடப்பு ஆண்டில் 2023 ஆம் ஆண்டு உலக அளவில் மக்கள் தொகை வளர்ச்சி ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அடுத்த ஆண்டில் உலக அளவில் வினாடிக்கு 4.3 பிறப்புகளும் இரண்டு இறப்புகளும் நிகழும். அமெரிக்கா மக்கள் தொகை வளர்ச்சியானது. நடப்பு ஆண்டில் 0.53 சதவீதமாக உள்ளது. இந்த ஓராண்டில் 17 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்க மக்கள் தொகை 33.6 கோடி தாண்டி உள்ளது.

அடுத்த ஆண்டில் அமெரிக்காவில் 9 வினாடிகளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் 9.5 வினாடிகளுக்கு ஒரு இறப்பு நிகழ்வு. 28.3 வினாடிகளுக்கு ஒரு வெளிநாட்டவர் அமெரிக்கா மக்கள் தொகை சேர்வார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு இடையில் அமெரிக்காவின் மக்கள் தொகை ஆய்வாளர் வில்லியம் பெரே கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் 1930 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்த நிலையின் போது மக்கள் தொகை வளர்ச்சி 7.3% சரிந்தது. தற்போது 2020 வரையிலான தசாப்தத்தில் அமெரிக்கா மக்கள் தொகை 4 சதவீதத்திற்கும் கீழ் சரியலாம். இதற்கு கொரோனா தொற்று பரவல் முக்கிய காரணமாக இருக்கும் என்றார்கள்.