21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் புகழேந்தி உடல் தகனம்

2 Min Read
21 குண்டுகள் முழங்க

உடல் நல கோளாறு காரணமாக மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அமைச்சர் பொன்முடி கண்ணீர்மல்க அஞ்சலி.திமுக வினர் பொது மக்கள் என ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

- Advertisement -
Ad imageAd image
மயானத்தில்

உடல்நல குறைவால் உயிரிழந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் உடல் அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்தில் உள்ள இல்லத்தில் நேற்றைய இரவு முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிதம்பரம் பொதுக்கூட்டம் முடித்துக் கொண்டு நேரடியாக விழுப்புரம் வருகை தந்து கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் அதன் பின்னர் அவரது குடும்ப உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் அதற்கு பின்னர் தமிழக முதல்வர் புதுச்சேரி புறப்பட்டு சென்றார். இரவு முதல் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்

பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது அங்கும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் பின்னர் அதே ஊரில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிக்கு சண்முகம் முன்னாள் மத்திய அமைச்சர் செந்தில் ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் களஞ்சியம் பாமக வேட்பாளர் முரளி சங்கர் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் பொன்முடி, கொளதமசிகாமணி, ரவிக்குமார். சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். புகழேந்தியின் உடல் வீட்டின் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தியின் உடலுக்கு அவரது மகன் செல்வகுமார் இறுதி சடங்குகளை செய்தார்.

Share This Article
Leave a review