ஆட்டு குட்டிக்கு பால் கொடுக்கும் பசு மாடு – வைரலாகும் வீடியோ…!

1 Min Read

தற்போதைய காலகட்டத்தில் தினமும் பல்வேறு வகையான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் அருவருப்பை ஏற்படுத்தும் வகையிலும், சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்த வீடியோக்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது; பசுமாடு ஒன்று ஆட்டு குட்டிக்கு பால் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image
ஆட்டு குட்டிக்கு பால் கொடுக்கும் பசு மாடு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையை சேர்ந்த விவசாயி அசோக்குமார். இவர் தனது பண்ணையில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது குடும்பத்தினர் ஆடு, மாடுகளை வளர்க்க லாப நோக்கத்திற்காக மட்டுமின்றி அவற்றின் மேல் உள்ள பாசம் காரணமாகவும், விட்டுவிடாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக வளர்த்து வருகின்றனர். இதில் ஒரு பசு மாடு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கன்றை ஈன்று பால் கொடுத்து வருகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் வளர்த்து வரும் ஆடு ஒன்று சில நாட்களுக்கு முன் குட்டி ஒன்றை ஈன்றது.

ஆட்டு குட்டிக்கு பால் கொடுக்கும் பசு மாடு

அசோக்குமாரின் வீட்டில் ஆடு, மாடுகள் ஒன்றாக வளர்ந்து வருவதால் அவற்றுக்குள் பாசப்பிணைப்பு ஏற்பட்டு ஆட்டு குட்டியானது பசுமாட்டிடம் சில நாட்களாக பால் குடித்து வருகிறது. இது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டு குட்டி பசு மாட்டிடம் பால் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share This Article
Leave a review