கேரளாவில் இரட்டை குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை..!

2 Min Read

கேரளாவில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். சாவதற்கு முன்பே எழுதி வைத்திருந்த ஒரு உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

- Advertisement -
Ad imageAd image

கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி பகுதியை சேர்ந்தவர் சுனு வயது 33. இவருடைய மனைவி சௌமியா வயது 30. இந்த தம்மதிக்கு 3 வயதில் ஆதி, அதுல் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர். வெல்டிங் பணியில் சுனு ஈடுபட்டு வந்தார். வெளிநாட்டில் நர்சாக பணியாற்றி வந்த சௌமியா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் மீண்டும் வெளிநாடு செல்ல சௌமியா ஆயத்தமானார். இதற்காக மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட போது அவருக்கு ரத்தத்தில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் சிகிச்சை பெற்றார். இதற்காக மூன்று வாரத்திற்கு இரண்டு முறை அவருக்கு ரத்தத்தை மாற்றும் பரிசோதனை நடந்தது.

ஆலப்புழா போலீசார் காவல் நிலையம்

இதனால் சௌமியா வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலை நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் சௌமியா வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. அதே சமயத்தில் கதவு திறந்த நிலையில் கிடந்தது. இது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஒரு அறையில் ஆதி, அதுல் ஆகிய இரண்டு குழந்தைகள் கட்டிலில் பிணமாக கிடந்தன. மற்றொரு அறையில் சுனுவும், சௌமியாவும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். இந்த உடல்களை பார்த்து அக்கம் பக்கத்தினர் கதறி அழுதனர். பின்னர் இது பற்றி தகவல் அறிந்தும் ஆலப்புழா போலீசார் சம்பவத்துக்கு விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரி

அதே சமயத்தில் சுனு தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் நோயால் அவதிப்படும் மனைவிக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. இதனால் குடும்பத்தோடு தற்கொலை முடிவை எடுத்துள்ளோம் என எழுதப்பட்டிருந்தது. மேலும் மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு சுனு கடன் வாங்கிய அடக்க முடியாமல் சிரமப்பட்டதாகும் தெரிகிறது. இது போன்ற மன அழுத்தத்தால் இரட்டை குழந்தைகளை கழுத்தை நெறித்து கொண்டு விட்டு சுனுவும், சௌமியா தூக்கில் தொங்கி உயிரே மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக ஆலப்புழை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review