மணிமுத்தாறு பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள் – ஒருவர் கூட பங்கேற்கவில்லை.

1 Min Read
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மணிமுத்தாறு பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ள நிலையில் இதில் திமுகவைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவர் பேரூராட்சி தலைவியாக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் பேரூராட்சி தலைவி ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி மணிமுத்தாறு பேரூராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தனர். தொடர்ந்து தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-madras-high-court-has-ordered-the-kallakurichi-district-collector-to-explain-about-the-road-facilities-in-the-kalvarayan-hill-area/

இந்த நிலையில் இன்று பேரூராட்சியில் அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டம் நடத்துவது குறித்து அழைப்பானை விடுக்கப்பட்டு இருந்தது இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தலைவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளனர் இதனால் கூட்டஅரங்கம் வெறிச்சோடி காணப்பட்டு பரபரப்பு நிலவியாது.

Share This Article
Leave a review