இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 60 ,000-த்தை தாண்டியுள்ளது . அதே நேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 10,000-த்தை கடந்துள்ளது .
இன்றைய நிலவரப்படி நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் 487 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 63,560 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8,175 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,50,649 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 10,542 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 92.46 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,40,014 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் நேற்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,127. ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 576. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 64,575. இதனையடுத்து உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 685,849,298 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,843,941. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களது எண்ணிக்கை 658,535,038 .
உலக நாடுகளில் கொரோனாவால் நேற்று மட்டும் பிரான்ஸில் 140 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 38 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது. தென்கொரியாவில் ஒருநாள் பாதிப்பு 15,173, ஜப்பானில் 11,589, பிரான்சில் 10,616 பேருக்கு கொரோனா தொற்று நேற்று பதிவானது.