NLC கலவரம்-சிகிச்சையில் காவலர்கள்., டிஜிபி நேரில் சந்தித்து ஆறுதல்.!

1 Min Read
டிஜிபி

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து பாமக அன்புமணி ராமதாஸ் முற்றுகை போராட்டம் நடத்திய போது அந்தப் போராட்டம் கலவரமாக மாறியது

- Advertisement -
Ad imageAd image

இதில் போராட்ட க்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போராட்டக்காரர்கள் திடீரென்று கல்லால் அங்கு உள்ள காவல் துறை வாகனத்தை தாக்கினர். பின்னர் போராட்டக்காரர்கள் 4 பக்கத்திலிருந்து கல்லால் காவல்துறை வண்டி மட்டும் காவலர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை அடக்குவதற்காக காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டு போட்டும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

இதில் பாதுகாப்பு பணியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களை 195 நபர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்திருந்தனர் அவர்களை ஆறு மணிக்கு விடுவித்தனர்.

இந்த நிலையில் காவல்துறையினர் காயம் பட்டு நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் இருப்பவர்களை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி பழங்கள் வழங்கினார் அவருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் காயம்பட்டவர்களை சந்தித்தனர்.

பின்னர் என்எல்சி நிர்வாகத்திடம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர் ஐஜி கண்ணன் பத்திரிக்கையாளிடம் கூறியதாவது, பாமக அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று என்எல்சி நிறுவனத்தை முற்று இடும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் போராட்டக்காரர்கள் கலவரமாக ஆக்கினர். இந்த கலவரத்துக்கு காரணமாக அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையின் மீதும் அவர்கள் தாக்கி உள்ளார்கள். ஆகையால் அவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a review