Coonoor : காட்டு யானையிடம் சிக்கிய ரயில்வே ஊழியர்கள் – பத்திரமாக மீட்ட வனத்துறை..!

1 Min Read

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஒற்றை காட்டு யானையிடம் சிக்கிய ரயில்வே ஊழியர்கள் பத்திரமாக மீட்ட குன்னூர் வனத்துறையினர். ஆக்ரோஷ மடைந்த காட்டு யானை துரத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி மாவட்டம், அடுத்த குன்னூர் மலைபாதையில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதால் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் நோக்கி படையெடுத்து வர தொடங்கி உள்ளது. மேலும் குன்னூர் மலைபாதையில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குழுக்களாக முகாமிட்டுள்ளன.

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதை

அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடந்து வருகிறது. இந்த நிலையில் குன்னூர் மலைபாதையில் வடுகன் தோட்டம் பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்தது. அப்போது அங்கு ரயில்வே ஊழியர்கள் பணி முடித்து திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது காட்டு யானை அவர்கள் வரும் பாதையில் வழிமறித்து நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்த வந்தது.

காட்டு யானை

அச்சத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் நின்ற ரயில்வே ஊழியர்களை குன்னூர் வனசரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வந்த வனத்துறையினர் காட்டு யானையிடம் இருந்து அவர்களை பாதுகாப்பாக சாலைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் சற்றும் எதிர்பாராத நிலையில் காட்டு யானை ஆக்ரோவுமாக சாலையில் துரத்தி வந்தததால் பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் காட்டு யானையை அருகே உள்ள வனபகுதிக்கு விரட்டினர். ரயில்வே ஊழியர்களை காட்டு யானை சிறை பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review