இந்தியாவில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார் ஆகிய மூன்று மாநில தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்தியாவில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அதே நேரம் மீதமுள்ள 3 மாநிலங்களிலும் அந்த கட்சி தோல்வி அடைந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து தோல்வி காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஏமாற்றம் அளிப்பதாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது; தெலுங்கானாவில் எங்களுக்கு வெற்றியை வழங்கியதற்காக மாநில மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதனை அடுத்து சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த மூன்று மாநிலங்களில் எங்களின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கிறது, என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இந்த மாநிலங்களில் காங்கிரசை மீண்டும் கட்டி எழுப்பவும், ஒத்துயிர் பெறவும், எங்களின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து நாங்கள் மீண்டும் வருவதுடன் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய கூட்டணி கட்சிகளுடன் நாங்கள் எங்களை முழுமையாக தயார் படுத்துவோம். இந்த 4 மாநிலங்களிலும் கட்சி உற்சாகமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.