119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் 65 தொகுதிகளில் முன்னிலையில் வகித்த காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த மாதம் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 மாநிலங்களிலும் பா.ஜ.க- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில். மிசோரம் மாநிலத்தில் நாளை(டிச.4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவான பிறகு, ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரத ராஷ்டிர சமிதியை (பி.ஆர்.எஸ்) வீழ்த்தி காங்கிரஸ் கட்சி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.சமீபத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
தெலங்கானாவை பொருத்தவரை, சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சி, காங்கிரஸ், பாஜகவும் இடையே மும்முனை போட்டி நிலவி வந்தது. இந்த மாநிலத்திற்கான தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தது.
தொடக்கத்திலிருந்தே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் தற்போது பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 2014 ஆம் ஆண்டு தெலங்கானா மாநில உறுவானது முதல் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. 10 ஆண்டு கால ஆட்சியை முறியடித்து இன்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ் கட்சியை வெளியேற்றி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகிறார்.

ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்த பாஜக.. அரியணையில் இருந்து இறக்கிவிடப்பட்ட காங்கிரஸ்!
தெலங்கானா வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஆளும் கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சி 39 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளனர். பாஜக 8 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். மேலும், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போட்டியிட்ட காமரெட்டி தொகுதியில் பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் எண்ணப்பட்ட இதர 3 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.