சிவகங்கையில் குஷ்பூ கண்டித்து குஷ்பு உருவப்படத்தை எரிக்க முடியாததால் போட்டோவை வைத்து எரித்த திமுகவினர். குஷ்புவின் படத்தை தீயிட்டு எரிக்கும் போது திமுக எம்எல்ஏ சேலையில் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு.
தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என ஆணவ பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து பெண்கள், திமுகவினர் உருவ பொம்மை எரித்தும், துடைப்பம், செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பேசியதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து உள்ளன.

குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது. குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும், செருப்பால் அடித்தும் திமுகவினர், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மகளிர் உரிமை தொகையை பற்றி கருத்து கூறிய குஷ்பூவை கண்டித்து சிவகங்கை திமுக மகளிர் அணி சார்பில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் குஷ்புவின் உருவ பொம்மையை எடுத்து வந்து நிறுத்தி பேசி கொண்டிருந்தனர்.
அப்போது பேசி முடித்த பின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்ட போது நைசாக உள்ளே புகுந்த போலீசார் குஷ்புவின் உருவ பொம்மையை ஒரு சேதாரம் இல்லாமல் பறித்து வெகுதூரம் நடந்தே கொண்டு சென்றனர். உருவ பொம்மை எரிக்க முடியாததால் குஷ்புவின் போட்டோவை வைத்து எரித்தனர்.

அப்போது எம்எல்ஏ தமிழரசி சேலையில் திடீரென லேசாக தீ பற்றியது. பின்னர் உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை குஷ்புவை கண்டித்து நேற்று திமுகவினர் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குஷ்புவை கண்டித்து போராட்ட