பிரதமர் மோடி பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்பட்டாரா ?

2 Min Read
பிரதமர் மோடி

பிரதமர் மோடி கேரளப் பயணத்தின் சாலைவிதிகளை பின்பற்ற வில்லையென்றும் , பொது மக்களுக்கு ஆபத்தை  ஏற்படுத்தும் வகையில் அவரது கார் பயணம் இருந்தது என்றும் , கொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் கேரளா டிஜிபி அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார் .

- Advertisement -
Ad imageAd image

பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக தனி விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த மோடிக்கு பாஜக கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

கேரளா வருகையின்போது கேரள பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து அவர் காணப்பட்டார் . மேலும் அங்கு நடக்கும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சுமார் விமானம் தரையிறங்கிய இடத்திலிருந்து , நடைபயணம் மேற்கொண்டார் . அப்பொழுது அவர் செல்லும் வழியெங்கும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் .

சுமார் 20 நிமிடங்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர் , நிகழ்ச்சிக்கு செல்ல தாமதம் ஆகிவிடும் என்று கருதி காரில் பயணத்தை தொடர்ந்தார் . அப்பொழுது பொதுமக்களுக்கு கை ஆசைப்பதற்காக காரின் முன்பக்க கதவை திறந்து வைத்த படி , உடல் முழுவதும் தெரிவது போல் காரினுள் நின்றபடி பயணம் செய்தார் . பிறகு கேரளாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

பிரதமர் கார் பயணம் மேற்கொண்டபோது 

பிரதமர் மோடி கொச்சியில் மேற்கொண்ட கார் பயணம் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததாக திருச்சூரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் டிஜிபி-க்கு புகார் அளித்துள்ளார் .

அவர் தனது புகாரில் , மோடி கார் ஊர்வலத்தின்போது அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் தூவிய பூக்கள் அவரின் கார் கண்ணாடியை முற்றிலுமாக மறைத்துவிட்டது . மேலும் அந்த கார் ஓட்டுநர் குத்துமதிப்பாகவே காரை ஓட்டினார் . கார் ஓட்டுநர் சற்று கவனக்குறைவாக செயல்பட்டு இருந்தாலும் பொது மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று அவரது புகாரில் தெரிவித்திருந்தார் .

மேலும் பிரதமர் மோடிமீது சட்ட ரிதீயான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள டிஜிபி மற்றும் மோட்டார் வாகன துறைக்கும் புகார் மனுவை அனுப்பியுள்ளார் .

பிரதமர் மீதே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review