நகைச்சுவை நடிகர் மனோபாலா மறைவு: பிரபலங்கள் இரங்கல் .

2 Min Read
நடிகர் மனோபாலா மறைவு

தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் மறைந்துள்ளார். மனோபாலா இதுவரை 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

மனோபாலாவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்: பிரபல இயக்குநரும், நடிகருமான அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள்; அவரது ஆத்மா சாந்தியடையட்டும் .

குஷ்பூ: நடிகரும், இயக்குநருமான மனோபாலாவை இழந்துவிட்டோம் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். மனோபாலா ஒரு மாபெரும் மனிதர், பிறருக்கு உதவுவதில் வல்லவர்.சினிமாவுக்கு அவரது பங்களிப்பு மகத்தானது, அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

நடிகர் சூரி: மனோபாலா திறமையான இயக்குநர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர். அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா. அவரது இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: எனது அன்பு நண்பர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

பாரதிராஜா: என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும், தமிழ்த்திரை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

நடிகர் கருணாஸ்: மனோபாலா நல்ல குணம் உடையவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

நடிகர் மதன்பாப்: அருமையான மனிதர்; அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அன்புமணி ராமதாஸ்: தமிழ்திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ்த்திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கல்.

கமல்ஹாசன்: இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

Share This Article
Leave a review