கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள எரவார் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மகள் பைரவி இவர் பெரிய சிறுவத்தூர் பகுதியில் உள்ள மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில் சேலம் அருகே உள்ள நீட் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சிக்காக சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து பைரவியால் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் பெற்றோர் பைரவியை தொடர்ந்து கல்லூரி படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பைரவி தொட்டியத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் வயலுக்கு அடித்து மீதம் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.இதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் மேல்கிச்சைக்காக அவர் சேலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவி பைரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து பைரவியின் தாய் சின்ன சேலம் காவல் நிலையத்தில் தனது மகள் சரியாக படிக்கவில்லை என்றும் படிக்க தொடர்ந்து தங்கள் வற்புறுத்தியதால் படிக்க விருப்பம் இல்லாமல் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து உயிரிழந்த மாணவி பைரவி-யின் சகோதரர் அரவிந்தன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பைரவி கடந்த ஆண்டு சேலத்தில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார் இந்த நிலையில் கடந்த நீட் தேர்வில் பைரவி குறைவான மதிப்பெண் பெற்று தோல்வியுற்றதாகவும், இதனை அடுத்து ஆத்தூரில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டதாகவும் அங்கு நீட் குறித்து நடத்தும் பாடங்கள் எதுவும் புரியவில்லை என்றும் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அடிக்கடி கூறி வந்ததாகவும் நீட் தேர்வு பயிற்சி மையத்திலிருந்து கடந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறைக்காக கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கு அவர் பூச்சி மருந்து குடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் வயிற்று வலி அதிகமாக உள்ளதாக பைரவி தெரிவித்ததை தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பைரவி என்று அதிகாலை உயிரிழந்ததாகவும் நீட் தேர்வு பாடங்கள் புரியாததால் தான் பைரவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.