கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அடுத்த மாதம் இரண்டாம் தேதி திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் அதற்க்கு அடுத்த நாள் திரு தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதனையெட்டி திருவிழாவிற்கான முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக கோயிலுக்கு வருகை தந்தார் அப்பொழுது கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு தனது காலணியை கழட்டி தனது உதவியாளரை அழைத்து எடுத்துச் செல்லுமாறு கூறினார். அதனை தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் கையால் எடுத்துச் சென்றார். இந்த சம்பவதை பார்த்த ஆய்வுக்காக காத்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

திராவிட மாடல் சமூக நீதி பேசும் திமுக அரசு இதைப்பற்றி என்ன சொல்லுகிறது என்று கேட்கிறார்கள் சமூக நீதி நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகிறவர்கள்.