ஆசிரியர் ஆபாச வார்த்தையில் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி..!

2 Min Read
செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி தனியார் பள்ளி

திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஆபாச வார்த்தையில் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிர கணக்கான மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.மேலும் இந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பள்ளியில் உள்ள விடுதியில் கட்டாயமாக தங்கி படிக்க வேண்டும் என அந்த தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களை கட்டாயபடுத்தி உள்ளதாக தெரிகிறது.

மேலும் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவ மாணவிகளை அந்த தனியார் பள்ளி நிர்வாகம் பள்ளி வகுப்பறையில் அனுமதிக்காமல் வளாகத்தில் வெளியில் நிறுத்தி வைப்பது,உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அப்பள்ளி மீது உள்ளது.

செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி தனியார் பள்ளி ஆசிரியர்கள்

இந்நிலையில் குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த மாணவி ஹேமப்ரியா வயது 17 தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு வணிகவியல் படித்து வருகிறார். இந்த மாணவியை ஆசிரியர் வினோத் என்பவர் சக மாணவிகளுக்கு முன்பு ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பள்ளி அறையில் வைத்திருந்த 7பாராசிட்டமல் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி தனியார் பள்ளி பேருந்துகள்

இச்சம்பவம் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்ததும் வெளியில் தெரியாமல் மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மாணவியை அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் மானவியை சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனை தரப்பில் இருந்து திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் பேரில் போலிசார் சம்மந்தபட்ட மாணவி மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஆபாச வார்த்தையில் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review