போதை மாத்திரை விற்பனை விவாகரத்தில் ஏற்பட்ட மோதலில் எம்.ஜி.ஆர் நகரில் பிளஸ் டூ மாணவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜய் வயது 17 அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்று உள்ளது. அந்த அரசு பள்ளியில் பிளஸ் டூ மாணவன் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு கடைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை லோகநாதன் பல இடங்களில் மகனை தேடியும் கிடைக்காததால் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஒரு மறைவான இடத்தில் கழுத்து மார்பு பகுதியில் காயத்துடன் அஜய் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் கூறியதாவது; எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கண்ணபிரான் வயது 24 அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 28 ஆகியோர் நண்பர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தனர்.

போதை மாத்திரைகளை வாங்கிய விவகாரத்தில் சரவணனுக்கு கண்ணபிரான் 15000 ரூபாய் கொடுக்க வேண்டியது இருந்தது. பின் கண்ணபிரான் தனியாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக அஜய் மற்றும் மேலும் சிலர் வாயிலாக மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது சரவணனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர் நகர் ஜாகிர் உசேன் தேர்வை சேர்ந்த டேவிட் வயது 25 என்ற நண்பருடன் கண்ணபிரான் வீட்டுக்கு சரவணன் சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால் அவரது உறவினரான அஜயை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பின் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய டேங்கின் மேல் ஏறி போதை மாத்திரையை உட்கொண்டனர்.

போதை மாத்திரை விற்பனை தொடர்பாக மிரட்டியதை அடுத்து அஜய் தப்பி ஓட பயின்று உள்ளார். அப்போது அவரை மார்பு மற்றும் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளனர். 25 வயது என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள சரவணன் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.