பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம்’ நாளேடுகளில் இப்படியான செய்திகள் அடிக்கடி வருவதைப் பார்த்திருப்பீர்கள். உடல்நல பாதிப்பால் வாந்தி, மயக்கம் ஏற்படுவதை விட, பயத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கமே அதிகமாக இருக்கும். இதனால் தான் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வருவதைப் பார்க்கிறோம். அப்போது பின்வருமாறு;- அரசு டாஸ்மாக் கடையில் பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மதுபான கடையில் இன்று 3 பேர் கொண்ட நண்பர்கள் 12 கிங்பிஷர் பீர் பாட்டிலை காசு கொடுத்து வாங்கியுள்ளனர். இதனை அடுத்து எடுத்தச்சென்ற நபர்கள் பீர் பாட்டில்களை வாகனத்தில் வைக்கும் பொழுது அதில் ஓர் பீர் பாட்டிலில் மட்டும் அளவு கம்மியாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அரசு மதுபான ஊழியரிடம் பீர் பாட்டிலில் மதுபானம் குறைவாக உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர் அந்த பீர் பாட்டிலை மேல் நோக்கி தூக்கிப் பார்த்த பொழுது தான் உள்ளே கலங்கலான படி பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளதை அவர்கள் அதிர்ச்சியடைந்து மதுபான கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மதுபான கடை சற்று நேரம் மூடப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அப்போது இருப்பினும் பல்லி இருந்த பீர் பாட்டிலை திரும்ப பெறாமலேயே அரசு மதுபான கடை ஊழியர்கள் குடிமகன்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இது மட்டுமல்லாமல் கடந்த வருடம் இதே போன்று காலாவதியான பீர்பாட்டில் இதே அரசு மதுபான கடையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது பீர் பாட்டிலில் பல்லி இருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை இதேபோன்று இந்த கடையில் நடப்பதால் குடிமகன்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.