தங்கலான் பட ஒத்திகையில் விபத்தில் சிக்கிய நடிகர் சீயான் விக்ரமிற்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் , மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்கும் நடிகர் விக்ரமால் இன்னும் சில நாட்களுக்கு தங்கலான் திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது என அவரின் மேலாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சீயான் விக்ரம் , இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்பாகம் I & II க்கு பிறகு , இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசை அமைக்கிறார் .

கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்றது . மேலும் இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப் நகரத்தை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது .
மேலும் சமீபத்தில் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது அதில் நடிகர் விக்ரம் உடல் எடை குறைந்து தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி தனக்கே உரிய நடிப்பு பாணியில் ரசிகர்களை மிரள வைத்தார். தங்கலான் படத்தில் நடிகை பார்வதி , பசுபதி , மாளவிகா மோகன், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் ஒத்திகை காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமிற்கு விலா எலும்பு முறிவுஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக விக்ரமின் மேலாளர் சூர்ய நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .
அந்த பதிவில் ”ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி , பொன்னியின் செல்வன் பாகம் II உலகளவில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது . மேலும் தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது சியான் காயமடைந்தார், இதன் விளைவாக விலா எலும்பு முறிந்தது,மேலும் அவரால் சிறிது காலத்திற்கு தங்கலான் படக்குழுவுடன் இணைந்து நடிக்க முடியாது என்றும் விரைவில் அவர் குணம் அடைந்து படப்பிடிப்பிற்கு வருவார்” என்று அவர் தெரிவித்துள்ளார் .