சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும்..என அறநிலையத்துறை தரப்பில் உறுதி தெரிவிப்பு…

2 Min Read
  • சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என அறநிலையத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோவில் கொடிமரத்தை அகற்றி விட்டு, புதிய கொடிமரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவிந்தராஜரின் பக்தர் ஹரிஹரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
  

அந்த மனுவில், கொடிமரம் தொடர்பாக சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையில் 1860 ம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டதாகவும், இது சம்பந்தமான வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது.

அதன்படி கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக் கொள்வது எனவும், எந்த பூஜையும், பிரம்மோற்சவ விழாவும் நடத்தக் கூடாது என சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 160 ஆண்டுகளாக எந்த பிரமோற்சவம் நடத்தப்படவில்லை என்றும், தற்போது கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைப்பது, முன்சீப் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது மட்டுமல்லாமல், சடங்கு – சம்பிரதாயங்களுக்கு எதிரானது என்பதால், தில்லை கோவிந்தராஜர் கோவிலில் புதிய கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் எனவும், புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி அறநிலைய துறைக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் புதிய கொடி மரத்தை அமைத்துவிட்டு பின்னர் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலை துறை திட்டமிட்டுள்ளது என்பதால் புதிய கொடிமரத்தை அமைக்க கூடாது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை மறுத்த அறநிலையைத் துறை தரப்பு வழக்கறிஞர் பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளதால் தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது என்றும் கொடிமரம் சேதமடைந்துள்ளதால் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/

அறநிலையத்துறை தரப்பின் இந்த வாதம் குறித்து ஆணையர் ஒரு வாரத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

Share This Article
Leave a review