- தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறு பேச்சு நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கூறிய வழக்கு. இரண்டு தரப்பு வாதங்கள் முடிந்து நீதிபதி வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் வியாழக்கிழமை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கஸ்தூரியின் பேச்சு திருப்பதி கோவிலுக்கு செல்லும் தமிழர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் வாதம். கஸ்தூரி தரப்பில், “குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அரசிக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே சொல்லப்பட்டது. தெலுங்கு பேசும் பெண்களின் மதிப்பை குலைக்கும் வகையில் பேசவில்லை.
புகாரில் மனுதாரரின் பேச்சு தவறாக காண்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், “மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அண்டை மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேசியுள்ளார். தெலுங்கு பேசும் நட்பு மாநில திருப்பதி கோவிலுக்கு 40% தமிழ் பக்தர்கள் சென்று வரும் சூழலில், மனுதாரரின் பேச்சு சரியானது அல்ல.
அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களின் சிந்தனை ஒன்றே. இது போன்ற சம்பவங்களை இப்படியே விட்டால், அது பிறரை ஊக்குவிப்பதைப் போல் அமைந்துவிடும். ஆகவே, அவருக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது” என தெரிவிக்கப்பட்டது.அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/orruption-in-govt-urban-habitat-development-board-shoulder-constructed-13-storied-buildings-boiling-liberation-panther-party-members/
[…] கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/ […]