சிதம்பரம் நடராஜர் கோவில் பக்தர்களின் சொத்து – ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து..!

3 Min Read
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கட்டுமான பணிகள் நடைபெறுவதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் எம்.என்.ராதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பின் ஆஜரான வக்கீல் சி.கனகராஜ் இந்த ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்த பின்னரும் கட்டுமானத்தை தொடர்ந்து கோவில் வளாகத்துக்குள் பொது தீட்சிதர்கள் மேற்கொள்கின்றனர். அதற்கு ஆதரவாக நேற்று எடுத்த புகைப்படங்களை தாக்கல் செய்கிறேன் என்று கூறி தாக்கல் செய்தார்.

- Advertisement -
Ad imageAd image

பொது தீட்சிதர் சார்பில் மூத்த வக்கீல் ஹரிசங்கர் ஆஜராகி சிதம்பரம் நடராஜர் கோவில் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை என்றார். அதற்கு நீதிபதிகள் திருவண்ணாமலை கோவிலுக்கு வெளியில் கட்டுமானங்கள் மேற்கொள்வது எதிர்த்து பலர் வழக்கு தொடர்கின்றனர். ஆனால் இந்த வழக்கில் சிதம்பரம் கோவிலுக்கு உள்ளே கட்டுமான மேற்கொள்வதாக தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன. பாரம்பரியமிக்க புராதான சின்னமாக திகழும் சிதம்பரம் கோவில் மீது கை வைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். சிதம்பரம் கோவில் என்பது பக்தர்களின் சொத்து அதன் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று கூறினார்.

ஐகோர்ட்டு

இதைத்தொடர்ந்து அறநிலை துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், சுப்பிரமணி சுவாமி வழக்கில் கூட சிதம்பரம் கோவிலில் முறையற்ற நிர்வாகம் நடந்தால் அதில் அரசு தலையிடலாம் என்று தான் கூறியுள்ளது. அதனால் கோவில் மீதான உரிமைகள் அனைத்தையும் யாருக்கும் கொடுத்து விடவில்லை. ஏற்கனவே இந்த கோவிலில் நடைபெறும் சட்ட விரோத கட்டுமான குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவின் படி கோவிலை ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை அமைத்து அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த கமிட்டி எப்போது வேண்டுமானாலும் சிதம்பரம் கோவிலுக்குள் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றார்.

அதற்கு பொது தீட்சிதர்கள் தரப்பு மூத்த வக்கீல் அந்த வழக்கை தொடர்ந்த நடராஜன் தீட்சிதர் பக்தர்களை தாக்கியதற்காக இடைநீக்கும் செய்யப்பட்டவர். அவர் தொடர்ந்த வழக்கு உள்நோக்கமானது. தவறான தகவலை தெரிவித்து உத்தரவுகளை பெற்றுள்ளனர் என்றார்.இதற்கு நீதிபதிகள் அப்படி என்றால் தலைமை நீதிபதி முன்பு முறையிட வேண்டும் எங்களை பொறுத்தவரை சிதம்பரம் கோவில் வளாகத்தில் கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று பொருள் தீட்சிதர் உத்தரவாதம் அளித்துள்ளனர். அந்த உத்தரவாதத்தை மீறியதற்காக ஆதரங்களையும் மனதாரர் தரப்பும், அறநிலைத்துறை தரப்பும் தாக்கல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம், அதை ஆய்வு செய்ய ஒரு கமிட்டியும் அமைக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில்

பின்னர் சிதம்பரம் கோவிலில் உண்டியல் இல்லை. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்த பக்தர்கள் வருகின்றனர். அப்படி வருபவர்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் அதை எப்படி வழங்க வேண்டும். அதற்கு என்ன நடைமுறை உள்ளது. என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு ஒரு மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் 1951-ஆம் ஆண்டு இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின்படி கோவிலில் உண்டியல் எதுவும் கிடையாது. பக்தர்கள் கோவிலுக்கு கொடுக்கும் நன்கொடை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தனிப்பட்ட முறையில் தரப்படும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று பதில் அளித்தார்.

அப்போது குறிக்கிட்ட மனுதாரர் வக்கீல் சி.கனகராஜ் கோவிலில் அனுமதியின்றி யாகங்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக பக்தர்களிடம் இருந்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று வசூலிக்கின்றனர். என்று கூறினார்.காற்றில் காதுக்கு வந்த ஆதாரம் அற்ற தகவல்களை எல்லாம் கூறக்கூடாது. அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை வருகிற 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Share This Article
1 Review