வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் வாலிபரின் மனைவி மற்றும் கள்ளக்காதலி கட்டிபுரண்டு சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் நகரின் மையப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகிருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த வாலிபருக்கும், அவரது நண்பனின் மனைவிக்கும், இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலகம் மாறி வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் கணவன் மனைவியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் வாலிபரின் தந்தை திடீரென இறந்துவிட்டார். இதனால் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார்.

அப்போது வாலிபரின் முதல் மனைவி அவரை மீண்டும் பிரிந்து செல்ல விடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் கடந்த ஒரு வாரமாக வாலிபரின் கள்ளக்காதலி அவரை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கள்ளக்காதலி வாலிபரே பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவது தெரியவந்தது. அங்கு சென்ற கள்ளக்காதலி வாலிபர் வசித்து வந்த வாடகை வீட்டில் கண்ணாடி வழி கல் வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து புகார் அளிப்பதற்காக அந்த வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். இது பற்றி அறிந்த கள்ளக்காதலி போலீஸ் நிலையத்திற்கு சென்று வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபரின் மனைவி கள்ளக்காதலியை தாக்கினார். தொடர்ந்து போலீஸ் நிலையத்திலேயே இரண்டு பெண்களும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். அவர்களே சமாதானம் செய்யச் சென்ற போலீசாரின் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உடனே போலீசார் அவர்களே தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் போலிஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.