சந்திராயன்-3 வெற்றி! இந்தியா இப்போது நிலவில் உள்ளது – மோடி பெருமிதம்.

2 Min Read
சந்திராயன்-3 வெற்றி! இந்தியா இப்போது நிலவில் உள்ளது - மோடி பெருமிதம்.

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதைக் காண பிரதமர் நரேந்திர மோடி காணொலி  மூலம் இஸ்ரோ குழுவுடன் இணைந்தார். வெற்றிகரமாகத் தரையிறங்கிய உடனேயே, இஸ்ரோ குழுவிடம் உரையாற்றி வரலாற்றுச் சாதனைக்காக அவர்களை பிரதமர் வாழ்த்தினார்.

- Advertisement -
Ad imageAd image

குடும்ப உறுப்பினர்களாக குழுவிடம் உரையாற்றிய பிரதமர்” இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் ஒரு தேசத்தின் நித்திய நனவாக மாறும் என்றும் கூறினார். “இந்தத் தருணம் மறக்க முடியாதது, முன்னெப்போதும் இல்லாதது. ‘வளர்ந்த பாரதம்’ என்ற முழக்கத்தின் தருணம், இந்தியாவுக்கு வெற்றி அழைப்பு, கஷ்டங்களின் கடலைக் கடந்து வெற்றியின் ‘சந்திரப்பாதை’யில் நடக்கும் தருணம் இது. இது 140 கோடி இதயத் துடிப்புகளின் திறன் மற்றும் இந்தியாவின் புதிய சக்தியின் நம்பிக்கையின் தருணம். இது இந்தியாவின் வளர்ந்து வரும் அதிர்ஷ்டத்தை ஊக்குவிக்கும் தருணம்” என்று பிரதமர் மகிழ்ச்சியுடன் கூறினார். ‘’அமிர்தக் கால’ படத்தின் முதல் ஒளியில், இது வெற்றியின் ‘அமிர்த மழை ஆகும்” என்று பிரதமர் மேலும் கூறினார். விஞ்ஞானிகளை மேற்கோள் காட்டிய பிரதமர், “இந்தியா இப்போது நிலவில் உள்ளது” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர்,”உலக மக்கள் மத்தியில், ஒவ்வொரு நாடு மற்றும் பிராந்திய மக்களிடையே உரையாற்றிய பிரதமர், “இந்தியாவின் வெற்றிகரமான நிலவுப் பயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல. இந்தியாவின் ஜி-20 மாநாட்டை உலகமே உற்று நோக்கும் ஆண்டு இது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற நமது  அணுகுமுறை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மனித மைய அணுகுமுறை உலகளவில் வரவேற்கப்பட்டுள்ளது. நமது நிலவுப் பயணமும் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இந்த வெற்றி மனிதகுலம் முழுமைக்கும் உரியது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளின்  நிலவுப் பயணங்களுக்கு  இது உதவும்” என்று  மோடி கூறினார். “உலகளாவிய தெற்குப் பகுதி உட்பட உலகின் அனைத்து நாடுகளும் இதுபோன்ற சாதனைகளைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

மேலும்,”சந்திரயான் மகா அபியான் திட்டத்தின் சாதனைகள் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு அப்பால் இந்தியாவின் பயணத்தை கொண்டு செல்லும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். “நமது சூரியக் குடும்பத்தின் வரம்புகளை நாங்கள் சோதிப்போம், மனிதர்களுக்கான பிரபஞ்சத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணர வேலை செய்வோம்” என்று மோடி குறிப்பிட்டார். எதிர்காலத்திற்கான லட்சிய இலக்குகளை நிர்ணயிப்பது குறித்து எடுத்துரைத்தப் பிரதமர், சூரியனைப் பற்றிய விரிவான ஆய்வுக்காக இஸ்ரோ விரைவில் ‘ஆதித்யா எல் -1’ திட்டத்தைத் தொடங்கப் போகிறது என்றும் தெரிவித்தார். இஸ்ரோவின் இலக்குகளில் வீனஸும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். “வானம் எல்லை அல்ல என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது”, என்று கூறிய பிரதமர், மிஷன் ககன்யான் திட்டத்தை எடுத்துரைத்தார், அங்கு இந்தியா தனது முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளது” என்று கூறினார்.

Share This Article
Leave a review