சிறுத்தைகள் நடமாட்டம் சிசிடிவி காட்சிகள். பொது மக்கள் அச்சம்.

1 Min Read
சிசிடிவி காட்சிகள்

வால்பாறை அருகே மலுக்கபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அப்பகுதி  காவல்நிலையம்  சிசிடிவி கேமராவில் மூன்று சிறுத்தைகள் நடமாடும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுத்தைகள்,யானைகள்.கரடிகள். போன்ற விலங்குகள்  குடியிருப்பு பகுதியில் சுற்றுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சில தினங்களாக குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.விட்டில் வளர்க்கும் ஆடு,கோழி,நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை சிறுத்தை கொன்று சாப்பிட்டு உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் மூன்று சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவதை  அங்குள்ள காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவில் குடியிருப்புகளில் இருந்து நாய்,கோழி,ஆடு போன்றவைகளை வேட்டையாடி சாப்பிட்டு விட்டு தேயிலை தோட்டத்தில் செல்கிறது.

தற்போது காவல் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளால் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.வனத்துறையினர் வனவிலங்குகளை பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Share This Article
Leave a review