திருப்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்த கைதி தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது

1 Min Read
தப்பி ஓடிய கைதி

பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பல்லடம் பஸ் நிலையம் செல்வதற்காக அவரை அழைத்துக் கொண்டு கோவை – திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென அந்த கைதி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.

- Advertisement -
Ad imageAd image

போலீசார் அவரை துரத்தி பிடிக்க முயன்ற போது சாலையின் தடுப்பை தாண்டி குதித்து ஓடினார். அப் போது எதிரே வந்த வேனில் மோதி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மடக்கிபிடித்த போலீசார் மீண்டும் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதி வானது. தற்போது இந்த கண்காணிப்புகேமராகாட்சிகள் பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.

Share This Article
Leave a review